திமுக, அதிமுக இருவரையும் எதிர்க்கிறோம்: இளங்கோவன்
சென்னை:
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஜெயலலிதா என்ற தீமையை எதிர்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறும்காங்கிரஸ் கட்சி தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தார்.
இதற்கு இளங்கோவன் அளித்துள்ள பதில் விவரம்:
இது கருணாநிதியின் சொந்த கருத்து. நாங்கள் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே எதிர்க்கிறோம்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறது என்பதால் தான் நாங்கள் தேர்தலை புறக்கணித்தோம்.இப்போது முதலில் இருந்ததை விட முறைகேடு அதிகமாக நடந்து வருகிறது.
எங்கள் கட்சியினர் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள், மேலும் யாருக்கும் ஆதரவாகவும் செயல்பட மாட்டார்கள்.
எங்கள் கட்சியினர் யாருக்காவது ஆதரவாக செயல்பட்டால், கட்சி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்என்று இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications