26,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெ. வெற்றி: மாணவர்கள் கருத்துக்கணிப்பு
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து சென்னை லயோலா கல்லூரி பண்பாடுமக்கள் தொடர்பகமும், காட்சி தகவல் இயல் துறையும் இணைந்து கருத்து கணிப்பு ஒன்றை நடத்தின.
இதற்காக 11 பேர் கொண்ட குழு ஒன்று ஆண்டிப்பட்டி சென்று ஆய்வு செய்தது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகுறித்து கல்லூரி முதல்வர் ஜோசப் சேவியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்படி தொகுதியின் அனைத்து கிராமங்களும் 6 வட்டமாக பிரிக்கப்பட்டு, வட்டத்துக்கு 4 கிராமங்கள் வீதம்24 கிராமங்களிலும், ஆண்டிப்பட்டி நகரிலும் 1,208 பேர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 68.9 சதவீதம் பேர் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். திமுகவுக்கு 17.9 சதவீதம்பேரும், மதிமுகவுக்கு 2.3 சதவீதம் பேரும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறினர்.
46.7 சதவீதம் பேர் அதிமுகவுக்கும், 33.4 சதவீதம் பேர் திமுகவுக்கும், 9.3 சதவீதம் பேர் மதிமுகவுக்கும், 3 சதவீதம்பேர் புதிய தமிழகம் கட்சிக்கும், 7.6 சதவீதம் பேர் பிற வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கப் போவதாககூறியுள்ளனர்.
திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்களில் 45.5 சதவீதம் பேர் அதிமுக தான் வெற்றி பெறும் என்கின்றனர்.பெண்கள் மிக அதிகமான அளவில் அதிமுகவை சார்ந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை அதிமுகவால் தான் தீர்க்க முடியும் என்றுபெரும்பாலான வாக்காளர்கள் கருதுகிறார்கள்.
ஆண்டிப்பட்டி தொகுதி மக்களின் கருத்துப்படி அதிமுகவின் வெற்றி நிச்சயமானது. குறைந்தபட்சம் 26,000வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.
ஜெயலலிதா மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் தன்மைக்கு ஏற்பவும், தேர்தல் நாளன்று பதிவாகப் போகும்வாக்குகளுக்கு ஏற்பவும் இந்த வித்தியாசம் பல மடங்கு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில்ஜோசப் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications