ஆண்டிப்பட்டியில் இறுதிக் கட்ட பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டியில் வரும் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அங்கு நாளை(செவ்வாய்க்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

இதையடுத்து அதிமுக, திமுக, மதிமுக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சியைச் சேர்ந்த தலைவர்களும்தொண்டர்களும் ஆண்டிப்பட்டியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிடும் வைகை சேகரை ஆதரித்து கடந்த சனிக்கிழமை ஒரே ஒருநாள் மட்டும் ஆண்டிப்பட்டிதொகுதியில் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, நேற்று சென்னைதிரும்பினார்.

வந்த கையோடு அடுக்கடுக்காக அதிமுக மீது பல புகார்களை சுடச்சுட நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான அக்கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா, இன்னும் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த 13ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, இன்றுடன் (பிப்.18) பிரச்சாரத்தை முடித்துக் கொண்டுநாளை சென்னை திரும்புகிறார்.

முதலில் 2 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்வதாக இருந்த ஜெயலலிதா, ஆண்டிப்பட்டியின் தொகுதியின் பல்வேறுகிராமங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அது போதாது என்று கூறியதால், பெரியகுளம் எம்.பியானதினகரனின் வேண்டுகோளை ஏற்று 18ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய அவர் முடிவெடுத்தார்.

வேட்பாளர் என்ற முறையில் தேனியில் மருத்துவக் கல்லூரி, ஆண்டிப்பட்டியில் கலைக் கல்லூரி, இலவசமின்சாரம் தொடரும், ரேஷன் அரிசி விலை குறையும் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்.

ஆனால் தேர்தல் விதிமுறைகளை மீறி நலத் திட்டங்களை ஜெயலலிதா அறிவித்து வருவதாக திமுகவினர்புகார்களை அள்ளித் தெளித்துக் கொண்டுள்ளனர். அவர் இன்னும் முதல்வர்தான் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் போலும்.

இந்நிலையில் மதிமுக வேட்பாளரான ஜெயச்சந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோஉள்ளிட்ட தலைவர்களும், புதிய தமிழகம் வேட்பாளரும் அக்கட்சியின் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமியைஆதரித்து அவர்களுடைய தொண்டர்களும் தீவிரமான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அனைத்தும் தயார் - தேர்தல் கமிஷன்:

இதற்கிடையே வரும் வியாழக்கிழமை (பிப்.21) நடைபெறவுள்ள ஆண்டிப்பட்டி தேர்தலுக்கான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு எந்திரத்தில் 16சின்னங்களைத்தான், அதாவது 16 வேட்பாளர்களின் பெயரைத்தான் பயன்படுத்த முடியும்.

ஆனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும்.

முதலாவது மின் வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்களும் 2வது எந்திரத்தில் 8வேட்பாளர்களின் பெயர்களும் இருக்கும்.

பாதுகாப்பு தீவிரம்:

இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெறும் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதால் அங்குவன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

எனவே ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட மத்திய ரிசர்வ்போலீஸ் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

மொத்தம் 1,300 மத்திய ரிசர்வ் போலீசார் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டனர்.இவர்கள் உள்பட மொத்தம் 3,000 போலீசார் இத்தொகுதியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள் என்றுதமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+