தங்கபாலுவுக்கு தமிழக காங்கிரஸ் நோட்டீஸ்
ஈரோடு:
ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிப்பது காங்கிரஸின் கடமை என்று கூறிய தங்கபாலு அடுத்த ஒரு வாரத்திற்குள்இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ். இளங்கோவன் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸுக்கு தார்மீக அடிப்படையில் பொறுப்புள்ளதுஎன்று காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு நேற்று கூறியிருந்தார்.
இது குறித்து ஈரோட்டில் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்கும்படி தங்கபாலு கூறியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்று கட்சி அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. 7நாட்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கட்சி மேலிடத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று இளங்கோவன் கூறினார்.
ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகரான கே. பார்த்தசாரதிநேற்றுதான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications