திமுகதான் என்னை ஆதரிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி பதிலடி
தேனி:
திமுகதான் எங்களை ஆதரிக்க வேண்டும், நாங்கள் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று புதிய தமிழகம் கட்சிதலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் மதிமுகவும், புதிய தமிழகம் கட்சியும் போட்டியிலிருந்து விலகி திமுகவுக்குஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்துகிருஷ்ணசாமி கூறியதாவது:
இந்த செய்தியை நான் பத்திரிக்கைகளில் பார்த்தேன். திமுகவிலிருந்து இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை.
ஆண்டிப்பட்டி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளரை அறிவிக்க மற்ற கட்சிகள் தடுமாறியபோது, எங்கள்கட்சி வலியுறுத்தியதால் நான் போட்டியிடுவதாக அறிவித்தேன்.
சென்னையில் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து என்னை ஆதரிக்கும்படி கேட்டேன்.ஆனால் காலம் கடந்து விட்டதாக அப்போது கருணாநிதி கூறினார்.
மேலும் ஆண்டிப்பட்டியில் கடந்த 10 நாட்களாக என்னை குற்றம் சாட்டியே திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. 7மாதங்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்த என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் திமுகவின் பிரச்சாரத்தால்இங்குள்ள தலித்துகள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவின் ஒத்துழைப்பு எங்களுக்கு இல்லை. எனவே,அதை நிவர்த்தி செய்யும்விதத்தில் ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளரை வாபஸ் பெற வைத்து என்னை வெற்றி பெறச் செய்வதே தலித்மக்களுக்கு கருணாநிதி செய்யும் நன்றிக் கடன்.
ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. திமுகதான் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றுகிருஷ்ணசாமி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications