சென்னை மியூசியத்துக்கு ரூ.77 லட்சம் செலவில் நவீன பாதுகாப்பு
சென்னை:
சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்புக்காக ரூ.77 லட்சம் செலவில் க்ளோஸ் சர்க்யூட் கேமரா உட்பட பலமின்னணு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ளது அரசு அருங்காட்சியகம். இங்கிருந்த 2000 ஆண்டு பழமையான,சுண்ணாம்புக்கல்லில் செய்த புத்தர் சிலையின் தலையை சமீபத்தில் யாரோ சிலர் துண்டித்து சென்று விட்டனர்.
இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விசாரிப்பதற்காகதம்பித்துரை சென்னை அரசு அருங்காட்சியகத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை சென்றார்.
அங்கு சிலை இருந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் அருங்காட்சியக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த சிலையின் தலை இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிலரின் உதவியுடனே கடத்திச் சென்றிருக்கப்பட்டிருக்கவேண்டும்.
அருங்காட்சியகத்தின் பாதுகாப்புக்காகவும், ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும்,அருங்காட்சியகத்தில் ரூ.77 லட்சம் செலவில் க்ளோஸ் சர்க்யூட் கேமரா உட்பட பல மின்னணு இயந்திரங்கள்அமைக்கப்படும்.
மேலும் சுற்றுச் சுவர்கள் உடைந்துள்ளன. இவற்றை உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெறும் என்று தம்பித்துரைகூறினார்.
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலை இந்த அருங்காட்சியகத்தில்தான்வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications