பிரபாகரனை ஒப்படைக்க இந்தியா கோரிக்கை
கொழும்பு:
பிராபகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து, இலங்கை அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சி.பி.ஐ.தலைமை இயக்குனர் பி.சி. சர்மா கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன், பெண் புலி அகிலா ஆகியோரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுஇலங்கை அரசிடம் இந்தியா நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் இந்தியாவிடம்பிரபாகரனை ஒப்படைப்பது குறித்து நிபந்தனை இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர் இன்னும் தேடப்படும்குற்றவாளிகளின் பட்டியலில் தான் இருக்கிறார்.
கொலையில் சம்பந்தப்பட்ட பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது சி.பி.ஐ.யின் கடமை.ஆனால் அவரை ஒப்படைப்பது குறித்து 2 நாட்டு அரசுகளும் தான் முடிவு செய்ய வேண்டும்.
பிரபாகரன் உட்பட இந்த 3 பேரும் ராஜீவ் காந்தி படுகொலையில் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரத்தை தேடும்பணியில் சி.பி.ஐ. ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்தப் பணி முடியும்.
பிறகு இது குறித்து 25 நாடுகளுக்கு அறிக்கை அனுப்பி பிரபாகரன் உட்பட 3 பேர் மீது இன்டர்போலின் மூலமாகஅலர்ட் நோட்டீஸ் கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சர்மா கூறினார்.












Click it and Unblock the Notifications