புலிகள்-கடற்படை மோதல்: பேச்சுவார்த்தை தோற்குமா?
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே போர்நிறுத்தம் அமலில் இருக்கும் சூழ்நிலையில் இன்றுபுலிகளுடன் நடந்த பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில் ஒரு இலங்கை கடற்படை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து விடுதலைப்புலிகளின் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த கடற்புலிகளும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கடற்புலிகளின் கடுமையான தாக்குதலுக்கு கடற்படை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பலகடற்படை வீரர்கள் குண்டுக் காயங்களுடன் தப்பிவிட்டனர்.
ஆனால் புலிகளின் தரப்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
இரு தரப்பினருக்குமிடையே காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்தத் துப்பாக்கிச் சண்டை பகல் நேரத்திலும்தொடர்ந்து நடக்கிறது.
இந்தத் துப்பாக்கி சண்டை குறித்து விடுதலைப்புலிகள் தங்களுடைய கருத்துக்களை இன்னும் தெரிவிக்கவில்லை.
கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு முதல் அமலில் இருந்தாலும், இந்தப் போர்நிறுத்தத்திற்கும் கடற்படைக்கும்சம்பந்தம் இல்லை என்பதால் புலிகளின் கடற்போக்குவரத்தை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு சில கப்பல்கள் மூலம் வடபகுதிக்குச் சென்றுகொண்டிருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்போனே கடந்த திங்கள்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நிரந்தரப் போர்நிறுத்தத்துக்கு நார்வே தூதுக் குழுவினர்முயன்று கொண்டிருக்கும் இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சண்டை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தத் துப்பாக்கிச் சண்டை காரணமாக அமைதிப் பேச்சுவார்த்தையே தடைபடக்கூடும் என்றும் தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்கு பாதிப்பில்லை: அமைச்சர்:
இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையே நடந்த இந்தச் சண்டையால்பேச்சுவார்த்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று இலங்கையின் அரசியல் சாசன விவகாரத்துறைஅமைச்சர் ஜி.எல். பெய்ரிஸ் கூறினார்.
அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான முக்கியமான சிலஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்றும் பெய்ரிஸ் நிருபர்களிடம் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications