வைகை சேகருக்கு எதிராக அதிமுகவினர் கோஷம்: வாக்குச் சாவடியில் பரபரப்பு
ஆண்டிப்பட்டி:
திமுக வேட்பாளர் வைகை சேகர் வாக்களிக்க வந்தபோது அவருக்கு எதிராக அதிமுகவினர் கோஷம்எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளரான வைகை சேகர் வைகைப் புதூர் பகுதியில் உள்ளவாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்தார். முதல் ஆளாக வந்த சேகருக்கு எதிராக அங்கு இருந்த அதிமுக பூத்எஜெண்டுகள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து சேகருடன் வந்த திமுகவினரும் திமுக பூத் ஏஜெண்டுகளும் ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும்எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கலவரம் ஏதும் மூண்டுவிடுமோ என வாக்களிக்க வந்த பொது மக்களும் வாக்குச் சாவடி அதிகாரிகளும் அஞ்சினர்.
ஆனால், உடனடியாக வாக்குச் சாவடிக்கு வெளியில் நின்றிருந்த போலீசார் உள்ளே விரைந்து வந்துஅனைவரையும் அமைதிப்படுத்தினர்.
இத்தனைக்கும் இடையிலும் வைகை சேகர் எந்தவிதமான டென்சனும் காட்டாமல் அமைதியாகவாக்களித்துவிட்டுப் போனார்.
வைகை சேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவர் வாக்களிக்க வந்தபோது இந்தபோலீசார் வாக்குச் சாவடிக்குள்ளேயும் பாதுகாப்புக்கு உடன் வந்தனர்.
அவரது காருக்கு முன்னும் பின்னும் வேன்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு வந்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications