ஜெ. வெற்றிக்காக கிரிவலம் சென்ற அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை மலைப் பாதையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் வேலுச்சாமி கிரிவலம் வந்து வழிபட்டார்.
ஆண்டிப்பட்டியில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார்.
அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை கோவிலில் கிரிவலத்திற்கு அதிமுகவின் மாணவர்அணி ஏற்பாடு செய்திருந்தது.
இதில் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிரிவலத்திற்குப் பிறகு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு அமைச்சர் உள்ளிட்டோர் சிறப்புவழிபாடுகளை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications