அமெரிக்க நிருபர் தலையை வெட்டிக் கொலை
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட நிருபர் டேனியேல் பேர்ல் கழுத்தை வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர் கொல்லப்பட்டுவிட்டதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வீடியோவைத் தந்தார்.அவரிடம் இதை யார் தந்தார்கள் என்று தெரியவில்லை.
மும்பையில் இருந்து இந்தப் பிராந்திய செய்திகளை சேகரித்து வந்தவர் பியர்ல். பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்ததகவல் சேகரிக்க அவர் கராச்சி சென்றார். அங்கு அவருக்கு சிறப்புப் பேட்டி தருவதாகக் கூறி ஷேக் உமர் சயீத்தலைமையிலான தீவிரவாதிகள் பியர்லை வலைவிரித்துப் பிடித்தனர்.
பின்னர் ஈ-மெயில் மூலம் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆப்கானிஸ்தானில் பிடிபட்ட தலிபான்தீவிரவாதிகளை கொடுமைப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை இக் கும்பல் முன் வைத்தது.
அமெரிக்காவின் நெருக்குதலையடுத்து உமர் சயீதை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவன் டேனியல் பியர்ல்கொல்லப்பட்டுவிட்டதாக போலீசாரிடம் கூறினான். ஆனால், இதை யாரும் நம்பாமல் இருந்து வந்தனர்.
ஆனால், இப்போது கிடைத்துள்ள வீடியோவில் டேனியேல் பியர்லை தீவிரவாதிகள் மிகக் கொடுமையாகத்தாக்குவதும் அவர் சுருண்டு விழுவதும் காட்டப்பட்டது. பின்னர் அவர் வீடியோவில் பேசுமாறு கூறப்படுகிறார்.அவர் வீடியோவைப் பார்த்தவண்ணம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது தலையை ஒரு தீவிரவாதிவெட்டுகிறான். ஒரே வெட்டில் அவரது துண்டாகி விழுகிறது.
அத்துடன் அந்த வீடியோ முடிகிறது. தீவிரவாதிகளின் முகங்கள் முகமூடியால் மறைக்கப்பட்டுள்ளன.
இவரைக் கடத்திய உமர் சயீத் டெல்லி திகார் சிறையில் இருந்தவன். இந்திய விமானம் நேபாளத்தில் இருந்துகடத்திச் செல்லப்பட்டபோது இவனையும், ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவன் மெளலானா முகம்மத்அஸார் ஆகியோரை இந்தியா விடுவித்தது.
ஐ.எஸ்.ஐ. மற்றும் தலிபான் உதவியுடன் விமானக் கடத்தல் நடத்தி இந்தத் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு தான்மீட்டது. இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் மிகச் சுதந்திரமாக செயல்பட்டு வந்தனர். ஆனால், தீவிரவாதத்துக்குஎதிரான போரில் பாகிஸ்தானைத் தான் அமெரிக்கா தூக்கி வைத்து ஆடி வந்தது.
இப்போது பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு தனது நாட்டு நிருபரையே இழந்துள்ளது. இனிமேலாவதுதீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா முறையாக கையாளும் என்று நம்பலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications