அடையாள அட்டை இன்றி தடுமாறிய மாஜி எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட வந்த ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச் செல்வனை ஓட்டுப் போட வாக்குச் சாவடி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பின்னர் கிராம நிர்வாகஅதிகாரியிடம் அனுமதி பெற்று வாக்களித்தார் தமிழ்ச் செல்வன்.

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவாக இருந்தவர் தங்கத் தமிழ்ச் செல்வன். ஜெயலலிதாவுக்காக தனது பதவியை அவர்ராஜினாமா செய்தார். இதையடுத்தே அங்கு நேற்று (வியாழக்கிழமை) இடைத் தேர்தல் நடந்தது.

ஆனால் தமிழ்ச் செல்வனுக்கே ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது. ஓட்டுப் போடச் சென்றபோது அவரிடம்வாக்காளர் அடையாள அட்டை இல்லை, தேர்தல் கமிஷன் கூறியிருந்த வேறு ஆவணங்களும் கையில் இல்லை.

இதையடுத்து தமிழ்ச் செல்வன் ஓட்டுப் போட அனுமதிக்க முடியாது என்று வாக்குச் சாவடியில் இருந்த தேர்தல்அதிகாரிகள் கூறி விட்டனர்.

கையைப் பிசைந்த தங்கத் தமிழ்ச் செல்வன் உடனடியாக தனது கிராமத்தில் இருந்த கிராம நிர்வாக அதிகாரியிடம்சென்றார். தான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்தான் என்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாகஅதிகாரியிடமிருந்து பெற்றுக் கொண்டு மீண்டும் வாக்குச் சாவடிக்கு வந்தார்.

அந்தச் சான்றிதழைக் காட்டிய பின் தங்கத் தமிழ்ச் செல்வன் ஓட்டுப் போட்டார். ஓட்டுப் போட்டு விட்டு வந்தபிறகுதான் அவரது முகத்தில் தெளிவைக் காண முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+