3வது அணிக்கு தலைமை ஏற்கத் தயார்: சுவாமி
சென்னை:
3வது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்க ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர்சுப்பிரமணியம் சுவாமி இன்று (சனிக்கிழமை) கூறினார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவது எங்கள் கட்சிதான். அதனால் 3வது அணி அமைந்தால்அதற்கு நான் தலைமை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.
முதலில் 3வது அணிக்குத் தேவையான பொதுவான கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து முடிவு செய்யவேண்டும். 3வது அணி அமைப்பதற்கான நல்ல சூழ்நிலை ஆண்டிப்பட்டியில் உருவானது. ஆனால் அதை மற்றகட்சிகள் சரிவர பயன்படுத்தவில்லை.
டான்சி வழக்கில் நான் செய்துள்ள அப்பீல் எனக்கு சாதகமாகத்தான் முடியும். ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில்வெற்றி பெற்று முதல்வரானாலும், டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின் மீண்டும் பதவி விலக நேரிடும்.
இந்தியப் பொருளாதாரத்தை காரணம் காட்டி ஊழியர்களைக் குறைப்பதற்கு இது சரியான தருணம் அல்ல.ஊழியர்களைக் குறைத்தால் தொழிற்சாலைகள் சரிவடைந்து விடும். மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகஅளவில் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தேவையற்றது. இதனால்ஒன்றும் இரு தரப்பினருக்குமிடையே சமாதானம் தோன்றாது.
அயோத்தி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்தே நிலத்தை கொடுப்பது பற்றி முடிவெடுக்கவேண்டும். அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்துக்களின் வழக்கப்படி முதல் குழந்தை, அந்த குழந்தையின் தாயின் சொந்த ஊரிலேதான் பிறந்திருக்க முடியும்.அதன்படி பார்த்தால் ராமரின் தாயான கெளசல்யாவின் சொந்த ஊரான பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலாவில்தான்ராமர் பிறந்திருக்க வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications