மீண்டும் திறக்கப்பட்டது வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (சனிக்கிழமை) காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன்உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்க்க வந்தவண்ணம் உள்ளனர்.
மர்ம விலங்கு நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வண்டலூர் பூங்கா மூடப்பட்டிருந்தது. மர்மவிலங்கு பிடிபடாமல் இருக்கும் நிலையில் அந்த விலங்கு அருகில் உள்ள காட்டுக்குள் புகுந்து விட்டதாகவிலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அந்த மர்ம விலங்கு சிறுத்தைதான் என்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த சிறுத்தைஇரவில் மட்டுமே உயிரியல் பூங்காவிற்குள் வருகிறது. பகலில் காட்டுக்குள் சென்று விடுகிறது என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து பூங்காவை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. பூங்கா இயக்குநர் தியாகி மற்றும் பிற வனஅதிகாரிகளின் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. நடமாடும் சிறுத்தையால் ஆபத்து இல்லை என்றும்பார்வையாளர்கள் பயமின்றி பூங்காவிற்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரியல் பூங்காவைகாண மக்கள் கூட்டம் திரண்டு வந்து கொண்டிருக்கிறது.
"சிங்கமோ சிறுத்தையோ காணாமல் போனதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் நாங்கள் தைரியமாகவேவந்துள்ளோம்" என்று இன்று பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களில் சிலர் தெரிவித்தனர்.
பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக பூங்காவின் உள்ளே கூடுதலாக ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications