தேசிய அரசியல், வாழ்க்கை வரலாறு: ஜெயாவின் கனவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசியல் தவிர தேசிய அரசியலிலும் கவனம் செலுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாகத் தெரிகிறது.அதிமுகவை தேசியக் கட்சியாக மாற்ற அவர் முயற்சிகள் மேற்கொள்வார் கூறப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் உள்ள அதிமுக கிளைகளை மேலும் வலுவுடன் செயல்படவைக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயா டிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,
அதிமுகவின் பெயர் அகில இந்திய அதிமுகவாக இருக்கிறதே தவிர கட்சி தேசிய அளவில் இல்லை. இதைதேசியக் கட்சியாக மாற்றுவது என் கனவு மட்டுமல்ல என் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று.
20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் என்வாழ்க்கை வரலாற்றை எழுதுவேன்.












Click it and Unblock the Notifications