ஜெயலலிதா பாராட்டு: கண்ணீர் விட்டு அழுதார் பன்னீர்
சென்னை:
முதல்வராக இருந்து சிறந்த பணியாற்றியதாக பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். அப்போதுமிகுந்த உணர்ச்சிவசப்பட்ட பன்னீர் கண்ணீர் விட்டு அழுதார்.
போயஸ் கார்டனில் நிருபர்களை ஜெயலலிதா சந்தித்தபோது அவருக்குப் பின்னால் தனது வழக்கமானபுன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார் பன்னீர்செல்வம். பெரிய சுமை இறங்கியது போல மிக ரிலாக்ஸ்டாகக்காணப்பட்டார் பன்னீர்செல்வம்.
அப்போது ஜெயலலிதாவிடம் பேசிய நிருபர்கள், முதல்வர் என்ற முறையில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுஎப்படி இருந்தது எனக் கேட்டனர்.
இதற்கு ஜெயலலிதா என்ன பதில் தரப் போகிறார் என மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் பன்னீர்.
ஜெயலலிதா கூறுகையில்,
அன்புச் சகோதரர் திரு.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் பதவி தரப்பட்டது. அந்தப் பதவியில் மிகுந்தபொறுப்புடனும் கண்ணியத்துடனும் செயல்பட்டார். மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு சிறந்தபணியாற்றினார்.
இவரைப் போன்ற ஒரு தொண்டர் எனக்குக் கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன் என்றுஜெயலலிதா கூற அதைக் கேட்டுக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
அதை துடைத்துவிட்டுக் கொண்டவண்ணம் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டவராய் நின்று கொண்டிருந்தார்.பன்னீர்செல்வம் குறித்து தான் தமிழில் கூறியதை அங்கிருந்த வட இந்திய டிவிகளுக்காக ஆங்கிலத்திலும் கூறினார்ஜெயலலிதா.
அப்போது அங்கிருந்த பிளாக் கேட் கமாண்டோக்களின் பின்னால் போய் தனது முகத்தைத் துடைத்துவிட்டுவழக்கமான தனது டிரேட் மார்க் சிரிப்புடன் திரும்பி வந்தார் பன்னீர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications