வேலூர் அருகே கோவில் தேர் கவிழ்ந்து அர்ச்சகர் பலி
வேலூர்:
வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் பிரம்மோற்சவத்தின் போது தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து கவிழ்ந்ததில்அர்ச்சகர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் நேற்று (சனிக்கிழமை) அங்குபிரம்மோற்சவம் திருவிழா நடைபெற்றது.
விழாவை காஞ்சி சங்கராச்சாரியாரான விஜயேந்திர சுவாமிகள் தொடங்கி வைத்தார். பிறகு கோவில் தேரோட்டம்தொடங்கியது.
ஆனால் தேரோட்டம் தொடங்கிய 5 நிமிடத்திலேயே தேரிலிருந்த ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்தது. இதனால் தேர்ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில் தேர் மேலிருந்த அர்ச்சகரான சுரேஷ் என்பவர் கீழே விழுந்து, தேர் சக்கரத்தில் சிக்கிபரிதாபமாக இறந்தார்.
மேலும் தேருக்கு முட்டுக் கொடுக்க முயன்ற 2 பேரும் ஒரு பக்தரும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications