நக்கீரன் நிருபர் மனைவியிடம் போலீசார் முறைகேடு
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீசார் அவரது மனைவி மற்றும் வீட்டுப்பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து சிவசுப்பிரமணியத்தின் மனைவி கதறி அழுதவாறு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை காலை என் கணவரை கைவிலங்கு போட்டு அழைத்துக் கொண்டு வந்த போலீசார் வாரண்ட்எதுவும் இல்லாமல் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர். நான் வாரண்ட் எங்கே என்று கேட்டதற்கு,என்னை வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசினர்.
என்னை என் கணவரிடம் கூட பேச அனுதிக்கவில்லை. மிக அடாவடித்தனமாக நடந்து கொண்டனர். வீட்டில்இருந்த பொருள்களை எல்லாம் தூக்கி எறிந்து அடாவடித்தனம் செய்தனர். பெண்களை மிகக் கேவலமாகநடத்தினர். இந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அகில இந்திய மனித உரிமை கமிஷனிடம்புகார் கூறுவேன் என்றார் ஜெயந்தி.
கடந்த சனிக்கிழமை போலீசார் சிவசுப்ரமணியத்தை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, செய்தி அறிந்துஅங்கு வந்த பொதுமக்கள் மற்றும் நிருபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.
சிவசுப்ரமணியத்தைப் பார்த்தவுடன் ஜெயந்தியும் மகன் நக்கீரனும் கதறி அழுதுள்ளனர். தன்னிடம் தாவி வந்தமகன் நக்கீரனைத் தூக்கக் கூட சிவசுப்ரமணியத்தைப் போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஜெயந்தி, சிவசுப்ரமணியத்தின் தாய், சகோதரி ஆகியோரை பெண் போலீசார் உடைகளை உருவியும் சோதனைநடத்தியுள்ளனர்.
மேலும் பெண்களை ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.
காலை 8.15க்கு வந்த போலீசார் காலை 11.10 வரை வீட்டில் சோதனை என்ற பெயரில் அத்துமீறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications