தேர்தல் முடிவு: உத்தரப் பிரதேசத்தில் பெரும் குழப்பம்
டெல்லி:
உத்தரப் பிரதேசத்தில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. அதே நேரத்தில்பஞ்சாப், உத்தராஞ்சல், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 404 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 202 இடங்களில்வெல்ல வேண்டும். ஆனால், எந்தக் கட்சியும் இந்த எண்ணிக்கையைத் தொடவில்லை.
முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி 146 இடங்களில் வென்று அதிக இடங்களைப் பிடித்த கட்சியாக விளங்குகிறது.அடுத்த இடத்தில் பா.ஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உள்ளன. இவர்களுக்கு 108 இடங்கள் கிடைத்துள்ளன.பா.ஜ.கவுக்கு தனியாக 88 இடம் தான் கிடைத்துள்ளது.
ஆனால், தலித்களின் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 99 இடங்களும், காங்கிரசுக்கு 26 இடங்களும்கிடைத்துள்ளன.
இதில் முலாயம் சிங்குக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் கூட ஆட்சியமைக்கத்தேவையான எம்.எல்.ஏக்கள் முலாயமிடம் இருக்க மாட்டார்கள். இதனால், சுயேச்சைகள் மற்றும் குட்டிக்கட்சிகளை அவர் வளைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
யாருக்கும் ஆதரவில்லை: பா.ஜ.க.
பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோர மாட்டோம் என அறிவித்துவிட்டது. யாரையும் ஆதரிக்க மாட்டோம்எனவும் அறிவித்துவிட்டது. இதனால், முலாயமுக்குத் தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பா.ஜ.க. ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி போட்டிருந்த திட்டம்பா.ஜ.கவின் அறிவிப்பினால் குலைந்து போய்விட்டது.
இன்று மாலை பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கூட்டத்தில் தான் எதிர்க்கட்சியாக செயல்படவும், யாரையும் ஆதரிப்பதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications