ரயில் கட்டணம் உயர்வு: சென்னை-திருவனந்தபுரம் இடையே அதிவேக ரயில் அறிமுகம்
டெல்லி:
இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் இரண்டாம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புக்கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய அதிவேக ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2002-2003ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார்இதனை தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்கள்:
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாவது வகுப்புக் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு 6 முதல் 14 சதவீதம்உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்ச இரண்டாவது வகுப்பு ரயில் கட்டணம் ரூ. 15ல் இருந்து 16 ஆக உயர்த்தப்படும்.இதன்மூலம் ரயில்வேக்கு ரூ. 910 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்குவரும்.
ஜன சதாப்தி எனப்படும் அதிக வசதியான இரண்டாவது வகுப்பு இருக்கைகள் கொண்ட 16 அதிவேக ரயில்கள்அறிமுகப்படுத்தப்படும். இதில் ஒரு ரயில் சென்னை-விஜயவாடா இடையே குண்டூர் வழியாக இயக்கப்படும்.
25 கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 7 பாசஞ்சர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும். எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருரயில்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நாகர்கோயில் வழியாகபுதிய ரயில் விடப்படும். கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு வாரந்திர ரயில் விடப்படும்.
படுக்கை வசதி கொண்ட ரயில்களில் கட்டணம் உயரும். தூரத்துக்கு தகுந்தவாறு ரூ. 155ல் இருந்து ரூ. 160 ஆகஉயர்த்தப்படும். ஏ.சி. சேர் கார்களில் கட்டணம் ரூ. 300ல் இருந்து ரூ. 350 ஆக உயர்த்தப்படும். ஏ.சி பெட்டிகளில்கட்டணம் ரூ. 1,440ல் இருந்து ரூ. 1,400 ஆக குறைக்கப்படும்.
ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் ரயில்வே துறையின் சார்பிலேயே பாட்டில்கள், பாக்கெட்களில் குடிநீர்விற்கப்படும். இதன் பெயர் ரயில் நீர்.
இது இந்தியன் ரயில்வேயின் 150வது ஆண்டு. இந்த ஆண்டு பயணிகள் குறைதீர்ப்பு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.
முன்பதிவு செய்யப்படாத (அன்-ரிசர்வ்ட்) டிக்கெட்டுகளைக் கூட எந்த ஸ்டேசனிலும் வாங்கிக் கொள்ளும்வகையில் வசதி கொண்டு வரப்படும். எந்த ரயிலுக்கும் எந்த ஸ்டேசனிலும் இனி டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.
இந்திய ரயில்களில் தினந்தோறும் 13 மில்லியன் மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் 12 மில்லியன் மக்கள்அன்-ரிசர்வ்ட் பயணிகள்.
ரயில்வேக்கான இந்த ஆண்டின் திட்ட ஒதுக்கீடு ரூ. 12,330 கோடிகள்.
ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்.
சிமெண்ட், பெட்ரோலியப் பொருள்கள், உப்பு, பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்கள், பயறுகள், யூரியா,உரம், வைக்கோல் ஆகியவற்றுக்கு சரக்குக் கட்டணம் குறைக்கப்படும்.
நிலக்கரி, இரும்பு தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செலப்படும் இரும்புத் தாது ஆகியவற்றின் சரக்குக் கட்டணம்சிறிது உயர்த்தப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ. 45 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.
100 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்கும் அனைத்து ரயில் நிலையங்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு ஆன்-லைன்ரிசர்வேசன் முறை கொண்டு வரப்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும்கம்ப்யூட்டர் ரிசர்வேசன் வந்துவிடும்.
நாடு முழுவதும் 16 ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும். மேலும் 14 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டு அருகாமைஊர்கள்வரை அவை இயக்கப்படும்.
மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications