மார்ச் 6ல் சென்னை மாநகராட்சி பட்ஜெட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 2002-2003ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 6ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து துணை மேயர், கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வரும் சட்டசபை உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அனுப்பியுள்ளார்.
6ம் தேதி காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம் 8ம் தேதி வரை நடைபெறும்.அதற்குப் பிறகு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே கராத்தே தியாகராஜன் அதை வெளியிட்டு பரபரப்பைஏற்படுத்தினார். இந்த முறை கராத்தே தியாகராஜன் துணை மேயராக உள்ளார். இந்த முறை என்ன மாதிரியானபரபரப்பு ஏற்படும் என்பது 6ம் தேதி தெரிய வரும்.












Click it and Unblock the Notifications