மதுரையில் உயர் நீதிமன்ற கிளையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை:
மதுரையில் உயர் நீதிமன்ற பெஞ்ச் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையில் உயர் நீதிமன்ற பெஞ்ச் அமைப்பதை எதிர்த்து வக்கீல்கள் ஸ்ரீதர்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றம் சார்ட்டர்டு நீதிமன்றம் என்பதால், அதன் கிளையைவேறு எங்கும் அமைக்க முடியாது. மாநில சீரமைப்புச் சட்டம் 51வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் வராது.அதனால் அதன் பெஞ்ச் வேறு எங்கும் அமைக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.
இம்மனுவை நீதிபதி சதாசிவம் விசாரித்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்த சதாசிவம் பிறப்பித்த உத்தரவில்கூறியுள்ளதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் பல்வேறு உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் பார்க்கும் போது, எந்த அடிப்படையில்உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் பெஞ்ச்சுகளை வேறு இடத்தில் துவங்க முடியும்.
தென் மாவட்ட மக்களின் வசதிகளையும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளையும் கருத்தில் கொண்டுதான்மதுரையில் பெஞ்ச் அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான அடிப்படை ஆதாரங்கள் கூட இந்த மனுக்களில் இல்லை. அதனால் இந்த மனுக்களைத்தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி சதாசிவம் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
மேலும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை மனுதாரர்கள் வீணடித்துள்ளதற்கும் நீதிபதி சதாசிவம் கடும்கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications