மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்போம்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தை ஆளும் அதிமுக ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு திமுகவின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும்ஆனால் மக்களைப் பாதிக்கும் விஷயங்களை எதிர்ப்போம் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
பிரச்சனையின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்போம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவருடையஅறிக்கையில் புதிதாக எந்தக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் தேசிய முன்னணியில் எந்த மாறுதலும் இருக்காதுஎன்று அவருடைய அறிக்கையில் இருந்து தெரிகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆக்கப்பூர்வமாகஒத்துழைக்க வேண்டும் என்பதால்தான் அவர் வெற்றி பெற்றதற்கும், அவருடைய பிறந்த நாளுக்கும் நான் வாழ்த்துதெரிவித்தேன். ஆனால் அதே நாளில் என்னை தரக்குறைவாக பேசி அறிக்கை விட்டார்.
திமுக எப்போதும் ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தரும். ஆனால் மக்களை பாதிக்கும்விஷயங்களை எதிர்ப்போம்.
தமிழகத்துக்கு நிதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை நாங்கள் வலியுறுத்த மாட்டோம். தமிழகத்தில் நிதிநிலைமையை சீர் செய்ய தமிழக அரசு முன்வந்து அனைத்து தமிழக எம்.பி.க்களின் கூட்டத்தை கூட்டினால்,நாங்களும் கலந்து கொண்டு எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
ஆண்டிப்பட்டி முறைகேடுகளை காரணம் காட்டி ஜெயலலிதாவின் வெற்றியை ரத்து செய்யுமாறு எந்தநீதிமன்றத்திலும் வழக்கு தொடர மாட்டோம். ஆண்டிப்பட்டியில் முறைகேடு நடந்திருப்பது மக்களுக்கு தெரிந்தாலேபோதும்.
பிற மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு தேசிய பிரச்சனை காரணமல்ல. இந்தத்தோல்வியால் தேசிய முன்னணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது.
ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. பட்ஜெட்டை திரும்ப பரிசீலிக்குமாறு மத்தியஅரசிடம் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைப்பர் என்று கருணாநிதி கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications