சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு புதிய ரயில் கட்டணம்
சென்னை:
சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கான புதிய ரயில் கட்டண விவரங்களைத் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய ரயில்வே பட்ஜெட் நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி ரயில்கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்த கட்டணங்கள் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
இதில் 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் தொலை தூர ரயில்களில் 341 கி.மீ. வரை ரூ.1 முதல் ரூ.6 வரைஉயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் 2ம் வகுப்பு புதிய கட்டணவிபரம் (அடைப்புக்குள் பழைய கட்டணம்):
சேலம் - 334 கி.மீ. - 161 (156)
ஈரோடு - 396 கி.மீ. - 175 (170)
தஞ்சாவூர் - 351 கி.மீ. - 173 (168)
திருச்சி - 336 கி.மீ. - 161 (156)
பெங்களூர் - 361 கி.மீ. - 170 (165)
மதுரை - 497 கி.மீ. - 203 (196)
கோயம்புத்தூர் - 496 கி.மீ. - 203 (196)
திண்டுக்கல் - 431 கி.மீ. - 191 (184)
விருதுநகர் - 554 கி.மீ. - 231 (222)
தூத்துக்குடி - 651 கி.மீ. - 257 (248)
திருநெல்வேலி - 654 கி.மீ. - 257 (248)
நாகர்கோவில் - 727 கி.மீ. - 273 (264)
கன்னியாகுமரி - 743 கி.மீ. - 277 (268)
ராமேஸ்வரம் - 666 கி.மீ. - 254 (245)












Click it and Unblock the Notifications