நக்கீரன் நிருபர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு
சேலம்:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தின் மனைவி, தந்தை, சகோதரி மற்றும் தினமலர், தினகரன் ஆகியபத்திரிக்கைகளின் நிருபர்கள் மீதும் சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வீரப்பன் விவகாரம் தொடர்பாக சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆத்தூரில் உள்ள அவரதுவீட்டில் ஈரோடு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது சிவசுப்ரமணியம் உடன் இருந்தார். அந்த சமயத்தில் தன்னிடம் பெண் போலீஸார் முறைகேடாக நடந்துகொண்டதாக சிவசுப்ரமணியத்தின் மனைவி ஜெயந்தி போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் போலீஸ் சோதனையின்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியும், பல்வேறு பிரிவுகளின்கீழும் சிவசுப்ரமணியத்தின் மனைவி ஜெயந்தி, தந்தை பெரியசாமி, சகோதரி மலர்க்கொடி ஆகியோர் மீது ஈரோடுபோலீஸார் புகார் கொடுத்ததால், ஆத்தூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, ஆத்தூர் தினமலர் மற்றும் தினகரன் பத்திரிக்கை நிருபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதேபோல, சென்னையைச் சேர்ந்த பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications