ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: வி.எச்.பி. உறுதி
டெல்லி:
எந்தச் சூழ்நிலையிலும் ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்அறிவித்துள்ளனர்.
அயோத்திப் பிரச்சனை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும் அமளியைக் கிளப்பியது.இதையடுத்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் எதிர்க் கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால்இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே அயோத்திப் பிரச்சனை குறித்து பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நேற்று மாலை அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தது.
அயோத்தில் ராமர் கோவிலைக் கட்ட அனுமதிக்கப் போவதில்லை என்று இக்கூட்டத்தில் உறுதியாகமுடிவெடுக்கப்பட்டது.
கடந்த 1992ல் நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழ மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உள்துறைஅமைச்சர் அத்வானி உறுதியாகக் கூறிவிட்டார்.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்குத் தேவையான நேரத்தில், தேவையானமுறையில் அலகாபாத் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் கூறினார்.
மேலும் உத்தரப் பிரதேசத் தேர்தலை முன்னிட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்ட ராணுவத்தை இப்போதைக்குவாபஸ் பெறமாட்டோம் என்றும் தேவைப்பட்டால் அங்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பி வைப்போம் என்றும்மகாஜன் குறிப்பிட்டார்.
ஆனால் ராமர் கோவிலைக் கட்ட அனுமதிக்கப் போவதில்லை என்று மத்திய அரசு இவ்வளவு உறுதியாகக்கூறிவிட்டபோதிலும், கோவிலைக் கட்டியே தீருவோம் என்றும் வி.எச்.பி. அமைப்பினரும் தங்கள் கொள்கையில்உறுதியுடன் உள்ளனர்.
ராமர் கோவில் கட்டுவதற்குத் தேவையான நிலத்தை மார்ச் 12ம் தேதிக்குள் மத்திய அரசு ஒப்படைத்துவிடும் என்றுசங் பரிவார் அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் 15ம் தேதி ஏற்கனவே குறிப்பிட்டபடி கரசேவக்புரத்திலிருந்து கோவில் தூண்களைஆயிரக்கணக்கான ராம பக்தர்கள் ராம ஜென்ம பூமிக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடவுள்ளனர் என்றுவி.எச்.பி. துணைத் தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications