தஞ்சை பல்கலையில் தமிழ் வழி மருத்துவம், பொறியியல் பட்ட வகுப்புகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரைவில் பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டப் படிப்புகள்துவக்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில், தமிழ் வழி கம்ப்யூட்டர் கல்வி என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கைபுதன்கிழமை தம்பித்துரை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ் வழிக் கம்ப்யூட்டரின் பயன்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் விரைவில் துவக்கப்படும்என்றார்.
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொற்கோ பேசுகையில், வரும் கல்வியாண்டு முதல் சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications