தம்பிதுரைக்கு சபாநாயகர் வாய்ப்பு?
சென்னை:
ஜெயலலிதா தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தம்பித்துரை அமைச்சராக இடம் பெற மாட்டார்என்றும் அவரை சபாநாயகராக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 2-ம் தேதி புதிய தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கவுள்ளார். புதிய அமைச்சர்களின் பட்டியலைஅவர் தயார் செய்து விட்டதாகவும், இன்று (புதன்கிழமை) அந்தப் பட்டியலை ஜெயலலிதா, ஆளுநரிடம்வழங்குவார் என்றும் தெரிகிறது.
புதிய அமைச்சரவையில் 20 பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. சிக்கனம் மற்றும் ராசி எண்அடிப்படையில் இந்த அமைச்சர்கள் குறைப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதிய அமைச்சரவையில் யார் இடம் பெறுவார்கள், யார் வெளியேறுவார்கள் என்ற யூகங்கள்தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. இதனால் தற்போதைய பல அமைச்சர்களின் வயிறுகள் கலங்கிக்கொண்டிருக்கின்றன.
சமீபத்திய தகவலின்படி, தம்பித்துரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதற்குப்பதில் காளிமுத்துவை அமைச்சராக்கி விட்டு, அந்தப் பொறுப்பில் தம்பித்துரை அமர வைக்கப்படுவார் என்றுஅதிமுகவினர் கூறுகின்றனர்.
தம்பித்துரை மீது பல்வேறு புகார்களை கட்சிக்காரர்களே சுமத்தியிருப்பதால் ஜெயலலிதா இந்த அதிரடி முடிவைஎடுக்கவுள்ளார் என்றும் இதற்குக் காரணம் கூறப்படுகிறது.
எப்படி இருப்பினும், ஜெயலலிதா பட்டியலை வெளியிடும் வரை அமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு விடையேகிடைக்காது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications