மரபுகளை மீறுவதே ஸ்டாலினுக்கு வாடிக்கை: சீறுகிறார் கராத்தே
சென்னை:
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் மரபுகளைத் தொடர்ந்து மீறி செயல்பட்டு வருவதாக துணை மேயர் கராத்தேதியாகராஜன் புகார் கூறியுள்ளார்.
சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் பிரசித்தி பெற்றது போல, மேயர் ஸ்டாலின், துணை மேயர் கராத்தே தியாகராஜன்மோதலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் அறிக்கைப் போரில் ஈடுபடுவதுவழக்கமாகிவிட்டது. மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் அவ்வப்போது வாய்ப் போரிலும் ஈடுபடுவார்கள்.
தற்போது மேயர் ஸ்டாலின் மரபுகளை மீறிச் செயல்படுவதாக கராத்தே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று(செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மரபுகளை மீறுவதையே ஒரு மரபாக வைத்துக் கொண்டுள்ளார் ஸ்டாலின். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்பொதுமக்களிடம் மேயர், நேரடியாக புகார் மனுக்களைப் பெறுவது மரபு.
அப்படிப் பெற முடியாத சமயங்களில் துணை மேயரிடம் புகார் மனுக்களைப் பெற கூறுவது மரபு. அவரும் இல்லாதபட்சத்தில் ஆளுங்கட்சித் தலைவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறி மனுக்களைப் பெறச் சொல்ல வேண்டும்.
ஆனால் காலம் காலமாக இருந்து வரும் இந்த மரபை மீறி வருகிறார் ஸ்டாலின். சில வாரங்களாக அவர் பொதுமக்கள் குறை கேட்கும் நகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை.
அதற்குப் பதில் என்னை மனுக்களைப் பெறச் சொல்வதைத் தவிர்த்து, அதிகாரிகளிடம் புகார் மனுக்களை வாங்கச்சொல்லி வாய் மொழியாக உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எழுத்துப் பூர்வமாக உத்தரவு பிறப்பித்தால் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவதாக அதிகாரிகள் கூறிவிட்டனர். மேயர் இல்லாத நலையில் தற்போது நான்தான் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறேன்.
பொதுமக்கள் குறை கேட்பு நாளுக்கு வருவதில்லை, மாநகராட்சிப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் போய்ப்பார்ப்பதில்லை, சாலைகள் பழுதுபட்டுக் கிடப்பதைப் பார்க்க வருவதில்லை என மக்கள் விரோதப் போக்கிலேயேஸ்டாலின் இருந்து வருகிறார் என்று குறை கூறினார் கராத்தே தியாகராஜன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications