"வீரப்பன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு": மேட்டூரில் திடீர் துண்டு பிரசுரங்கள்
மேட்டூர்:
வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசளிக்கப்படும்என்று தமிழக-கர்நாடக அரசுகளின் பெயரில் மேட்டூர் மற்றும் கொளத்தூரில் பல இடங்களில் துண்டுப் பிரசுரங்கள்ஒட்டப்பட்டுள்ளன.
பல வண்ணங்களில் தயாராகியுள்ள இந்தத் துண்டுப் பிரசுரங்கள் மேட்டூர் மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளில்நேற்று திடீரென்று ஒட்டப்பட்டிருந்தன.
"தமிழக-கர்நாடக அரசுகள் ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு" என்ற தலைப்பில் அச்சிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தில், "வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகளைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு சன்மானம்" என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாசகங்களுக்குக் கீழே வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் மற்றும் சந்திரகவுட ஆகியோரின்புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
இவற்றுக்குக் கீழே "தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: சத்தி கேம்ப் - 04295 22600, 24111,25111, அந்தியூர் கேம்ப் - 04256 51443, 62030, மேட்டூர் கேம்ப் - 04298 344525 மற்றும் கோவை - 0422606866" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேட்டூரிலும் கொளத்தூரிலும் மக்கள் கூடும் முக்கியமான இடங்களான பஸ் நிலையம், பஸ்கள் உள்பட பலஇடங்களில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிரடிப்படையினரின் உதவியுடன் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டனவா அல்லது வேறு யாரும்ஒட்டியுள்ளனரா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications