மு.க.ஸ்டாலினுக்கு வயது 50
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகர மேயரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான மு.க. ஸ்டாலினின் 50வது பிறந்த நாள் மார்ச்1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஸ்டாலினின் பொன்விழா பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட திமுக இளைஞர் அணி ஏற்பாடுசெய்துள்ளது.
சென்னை முழுவதிலும் மார்ச் 1ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய நாளைஇளைஞர் எழுச்சி நாளாக திமுக இளைஞர் அணி அறிவித்துள்ளது.
மாணவ, மாணவியருக்கு சர்க்கரைப் பொங்கல், இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், கிரிக்கெட் போட்டிநடத்துதல், ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications