ஜெ. நலமுடன் வாழ 108 விளக்கு பூஜை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெயலலிதா நலமுடன் வாழ வேண்டி சென்னையில் அமைச்சர் வளர்மதிதலைமையில் 108 விளக்கு பூஜை மகம் நட்சத்திர தினமான கடந்த புதன்கிழமை நடத்தப்பட்டது.
சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அருள் மிகு நாகாத்தம்மன் கோவிலில் இந்த 108 விளக்கு பூஜை நடந்தது.இதில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி உள்பட 108 பெண்கள் கலந்து கொண்டனர்.
விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளர்மதி பரிசுகளை வழங்கினார்.
தென்சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் சைதை துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications