அகமதாபாத்தில் ஊரடங்கு தளர்வு, ராஜஸ்தானில் ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

அகமதாபாத்தில் சில இடங்களில் கொஞ்சம் அமைதி திரும்பியதையடுத்து அந்தப் பகுதிகளில் மட்டும் ஊரடங்குதளர்த்தப்பட்டுள்ளது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் வன்முறை பரவியதால் பலநகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறையால் குஜராத்தில் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். தலைநகர் அகமதாபாத்தில் தான் பெரும்வன்முறை நடந்தது. இங்கு மட்டும் 140 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இரவில் கூட சிறுபான்மைசமுதாயத்தினரின் வீடுகள் எரிக்கப்பட்டு அதில் இருந்த 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவம் வந்தும் கூட இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ஆனால், ஊரடங்கு திடீரெனஅமலாக்கப்பட்டதால் மக்கள் பால், தண்ணீர், மண்ணெண்ணை கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இதானால்இன்று சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே கூறுகையில்,

அகமதாபாத்தில் நவ்ரங்கபுரா, ஷாஹிபாக் ஆகிய இடங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் நிலைமைக்கு தகுந்தவாறு மேலும் 18 காவல் நிலையங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் ஊரடங்குதளர்த்தப்படும் என்று கூறினார்.

ராஜஸ்தானில் வன்முறை- ஊரடங்கு:

இந்நிலையில் ராஜஸ்தானில் வன்முறை பரவி வருவதால் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் அங்குபெருமளவில் கலவரம் எதுவும் நடைபெறவில்லை என்று ராஜஸ்தான் போலீசார் கூறினர்.

எனினும் ராஜஸ்தானில் உள்ள சிமல்வாரா என்ற இடத்தில் வன்முறையாளர்களை கலைக்க நடந்த துப்பாக்கிசூட்டில் 16வயது சிறுவன் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தான்.

வி.எச்.பிக்கு சோனியா கண்டனம்:

கலவரத்தைத் தடுக்க குஜராத் மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கத் தவறுவிட்டதாக காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி கூறியுள்ளார்.

சோனியா காந்தி பெல்லாரிக்கு போகும் வழியில் இன்று (சனிக்கிழமை) பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

குஜராத் மாநிலத்தில் கலவரத்தை தடுக்க அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை எனக்குதிருப்தியளிக்கவில்லை. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு வி.எச்.பி. கெடு விதிப்பது சரியல்ல. அவர்களின் நெருக்குதல்களுக்குமத்திய அரசு பணியக் கூடாது. மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழி தந்தால் தான் கோவில்கட்டும் பணியில் மாற்றம் செய்வோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+