ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை:
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சட்டசபை திமுக எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன், சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்தமுறை அவர் முதல்வரானபோது மேயராக இருந்த ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதைஸ்டாலினே நிருபர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந் நிலையில் இம்முறை பதவியேற்பு விழாவுக்கு அவருக்கு அரசின் சார்பில் முறைப்படி அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த ஸ்டாலினும் அன்பழகனும் யாருடனும் பேசவில்லை.
ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து வரும் ப.சிதம்பரத்தின் கட்சியில் உள்ள அவரது தீவிரமானஆதரவாளரான புரசைவாக்கம் ரங்கரகாஜனும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்டாலினுக்கு அருகில் அவர்அமர வைக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த முறை ஜெயலலிதா முதல்வரானவுடன் கைது செய்யப்பட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரசில் சமீபத்தில் இணைந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், அவரது கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் இந் நிகழ்ச்சியில்பங்கேற்கவில்லை.
மதிமுக தலைவர் வைகோவும் இந் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications