இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக 2 சிங்கள கட்சிகள் வழக்கு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை எதிர்த்து 2சிங்கள கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

சமீபத்தில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விக்கிரமசிங்கேவும், விடுதலைப்புலிகள் தலைவர்பிரபாகரனும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்கள் இலங்கையை பாதிக்கும் வகையில்இருப்பதால், அதை ரத்து செய்யப்போவதாக இலங்கை அதிபர் சந்திரிகா அறிவித்தார்.

இந்நிலையில் சிங்கள உருமையா, சிங்கள ஜாதிக சங்கமயா என்ற 2 கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடபிரதமருக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

சிங்கள உருமையா கட்சி தனது மனுவில் கூறியிருப்பதாவது:

1978 அரசியலமைப்பு சட்டப்படி, இலங்கை அரசுக்கு தலைமை வகிக்க பிரதமருக்கு அதிகாரம் இல்லை. இலங்கைஅதிபருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ஆகவே இலங்கை அரசு சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமருக்கு உரிமை இல்லை.

மேலும் ஒப்பந்தத்தின் சில பகுதிகள் இலங்கை அரசை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தில்சில பகுதிகளை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளது.

இந்த மனுவை இலங்கை நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

பாலசிங்கம்- நார்வே தூதர் சந்திப்பு:

இந்நிலையில் நார்வே ராணுவத்தின் முன்னாள் ஜெனரலும், நார்வே தூதுக்குழுவின் தலைவருமான மாஜ் ஜென்டிரான்ட் இன்று (சனிக்கிழமை) இலங்கை விரைந்தார். அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்தித்துஒப்பந்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் குறித்து விவாதித்தார்.

அதிபர் சந்திரிகா ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவதாக கூறியதையடுத்து இவர் லண்டனில் விடுதலைப்புலிகளின்அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது பிரதமர்விக்கிரமசிங்கேயையும் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+