அமைச்சராகப் பதவியேற்றார் பன்னீர் செல்வம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது வழக்கமான அடக்கத்துடன் அமைச்சராகப் பதவியேற்றார் நேற்றுவரை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம்.
5 மாதம் முதல்வர் பதவியில் இருந்த பன்னீர் செல்வம் இன்று ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராகப்பதவியேற்றார். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
கடவுளின் பெயரால் பதவியேற்ற அவர் வழக்கமான புன்னகையுடன் காணப்பட்டார்.
பதவியேற்கச் செல்லும்போதும், பதவியேற்றுவிட்டு வந்த பின்னரும் ஜெயலலிதாவை வணங்கிவிட்டு அமர்ந்தார்.
இதுவரை அமைச்சரவையில் நம்பர்-டூ வாக இருந்த வந்த சி.பொன்னையன் இம் முறை பன்னீர்செல்வத்துக்குஅடுத்தபடியாக மூன்றாவதாக பதவியேற்றார்.












Click it and Unblock the Notifications