குஜராத்தில் உயிர் பலிகள்: உளவுத்துறை மீது பழிபோடும் அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத்தில் கலவரம் நடக்க இருப்பது குறித்து மாநில உளவுத்துறை முன்னதாகவே தகவல் எதுவும் தெரிக்கவில்லைஎன்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சுவாமி கூறியுள்ளார்.

குஜராத்தில் ரயில் எரிக்கப்பட்டதை அடுத்து கலவரத்தால் 330க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறைவெடித்த முதல் 2 நாட்கள் மத்திய அரசும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு பகலாககொலைக் கும்பல்கள் வீடுகளையும் மக்களையும் எரித்து வந்தன. குஜராஜ் போலீசார் இந்த வன்முறைகளைகண்டுகொள்ளவேயில்லை.

பத்திரிக்கைகளிலும் டிவிக்களிலும் இந்த செய்திகள் வந்த பின்னர் தான் ராணுவத்தை மத்திய அரசு அனுப்பியது.அகமதாபாத்துக்கு ராணுவம் வந்திறங்கவே 3 நாட்கள் ஆனது. குஜராத்தில் பாகிஸ்தான் எல்லையில் தான் ராணுவம்உள்ளது. குஜராத்தில் இருந்த ராணுவத்தை கலவரப் பகுதிக்கு மத்திய அரசு அழைக்கவில்லை.

ரயில் எரிப்பில் அயோத்தி கர சேவகர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக முஸ்லீம்களைக் கொல்லவன்முறையாளர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசும் வழிவிட்டுவிட்டுஅமைதியாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறியுள்ளது.

இந் நிலையில் இப்போது இதற்கான பழியை உளவுத்துறை மீது போட்டுவிட்டுத் தப்பிக் கொள்ள மத்திய அரசுமுயல்வதாகத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறைஇணையமைச்சர் சுவாமி கூறியதாவது:

இந்த வன்முறை குறித்து மாநில சி.ஐ.டி.யும், உளவுத்துறையும் முன்னதாகவே தெரிவிக்கவில்லை. இந்தவிஷயத்தில் மாநில அரசின் தவறு எதுவும் இல்லை.

மாநிலத்தை சகஜநிலைக்கு கொண்டு வர கால அவகாசம் வேண்டும். ஏனெனில் மாநில அரசிடம் தேவையானஅளவு போலீஸ் போர்ஸ் இல்லை.

ராணுவத்தை அழைப்பதற்கு மாநில அரசு தாமதப்படுத்தியது என்று எதிர்கட்சிகள் கூறுவதில் உண்மை இல்லை.

கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டதில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம்.அதற்கான ஆதாரத்தை திரட்ட மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று சுவாமி கூறினார்.

மாநில உளவுத்துறை மீது குறை கூறும் சுவாமி இந்த விஷயத்தில் மத்திய உளவுத்துறை என்ன செய்தது என்றுபேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வி.எச்.பி. பிடிவாதம்:

அயோத்தி விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அதைக் கண்டு கொள்ளாமல் விஸ்வ ஹிந்து பரிஷத் நேரடிநடவடிக்கைகளில் இறங்கியதால் தான் இப்போது வன்முறையும் உயிர்ப் பலிகளும் ஏற்பட்டுள்ளன.

இவ்வளவு நடந்த பின்னரும் திட்டமிட்டபடி மார்ச் 15ல் ராமர் கோவில் கட்டும் பணி நடைபெறும் என்று விஸ்வஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கும், 43 ஏக்கர் நிலத்தை தருவதாகவும், அயோத்தியில்சமீபத்தில் போடப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகவும் வாஜ்பாய் உறுதியளிக்க வேண்டும் என்று இந்தஅமைப்பின் செய்தி தொடர்பாளர் வீரேஸ்வர் த்விவேதி நிருபர்களிடம் கூறியுள்ளார்.

இந்த அமைப்பின் கோரிக்கைகளுக்கு பணியக் கூடாது என காங்கிரஸ் கூறியுள்ளது.

கரசேவர்களுக்குத் தடை:

குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து அயோத்தி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் வேறு பாதையில்திருப்பி விடப்பட்டுள்ளதால் கரசேவர்கள் அயோத்திக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளர்.

குஜராத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதை அடுத்து அயோத்தி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வேறுபாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் இருந்துகரசேவைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுல்தான்பூர் உட்பட பல இடங்களில் கரசேவைக்கு வந்தவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களைஅயோத்திக்கு கொண்டு வரும் பணியில் வி.எச்.பி.யினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 6,000 பேர் கரசேவைக்காக அயோத்திக்கு வந்துள்ளதாக வி.எச்.பி.யினர் தெரிவிக்கின்றனர். ஆனால்20,000க்கும் மேற்பட்டோர் கரசேவைக்காக அயோத்தியில் குவிந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குஜராத், ராஜஸ்தான், கர்நாடகத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிரம் ஆகிய இடங்களில் நான்காவது நாளாகவன்முறை தொடர்ந்து கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+