நிதி நெருக்கடியை நீக்குவதே என் முதல் பணி: ஜெ.
சென்னை:
நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்பதே எனது முதல் பணி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
கோட்டையில் நேற்று (சனிக்கிழமை) முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா பின்னர் மாலையில் நிருபர்களைசந்தித்த போது கூறியதாவது:
என்னுடைய முதல் பணி நிதி நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். தமிழகத்தை எல்லா துறையிலும்முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். நிதி நிலையை எப்படி சீர் செய்ய போகிறேன் என்பதை நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யும் போது தெரிந்து கொள்ளலாம்.
ஊழலற்ற, வெளிப்படையாக செயல்படும் அரசாக என்னுடைய அரசு இருக்கும்.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பதவியேற்பு விழாவுக்கு, மேயர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றி.
யாரையும் பழி வாங்கும் நோக்கம் எனக்கு இல்லை. அதே நேரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்அவர்கள் மீது நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.
3வது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா முதன் முதலாக 3 பைல்களில் கையெழுத்திட்டார்.
இதில் முதலாவதாக சென்னையைத் தவிர்த்து மற்ற 29 மாவட்டங்களில் ஊரக கூட்டுக் குடிநீர் திட்டம், ஊட்டச்சத்துகுறைவான குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து திட்டம் மற்றும் வரும் 9ம் தேதி கவர்னர் உரை அறிவிப்புபோன்றவற்றில் கையொப்பமிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications