குஜராத்: பான் வியாபாரி குடும்பத்தினர் உயிருடன் எரிப்பு
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் மெக்சனா மாவட்டத்தில் பான் வியாபாரியின் கடையையும் வீடையும் கொளுத்தியதில் அவர்குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
அயோத்தி விவகாரத்தில் ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தில் 427 பேருக்கு மேல்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மெக்சானா மாவட்டத்தில் உள்ள பிப்டா தார்வாஜா பகுதியில் வியாழக்கிழமை ஒரு பான்வியாபாரியின் கடையையும், வீட்டையும் வன்முறையாளர்கள் கொளுத்தினர்.
ஆனால் இந்தச் சம்பவத்தில் பான் வியாபாரி மட்டும் தப்பித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம்அடைந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும்படி கூறியுள்ளார்.
ஆனால் போலீசார் வந்து காப்பாற்றுவதற்குள் அவருடைய குடும்பத்தினர் 9 பேரும் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். போலீஸிடம் தஞ்சம் அடைந்ததால் அவர் மட்டும் உயிர் தப்பினார்.
பான் வியாபாரியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண்மணியின் வீட்டையும் கெரசின் ஊற்றி வன்முறை கும்பல்எரித்துள்ளது. ஆனால் அந்தப் பெண்மணி தப்பி விட்டார்.












Click it and Unblock the Notifications