ஆசிரியர் திட்டியதால் சென்னைக்கு ஓடிவந்த 4 மாணவிகள்
சென்னை:
நீங்கள் எல்லாம் எங்கே பாஸ் ஆகப் போகிறீர்கள் என்று ஆசிரியர் திட்டியதால் வருத்தமுற்ற நாகப்பட்டனத்தைச் சேர்ந்த நான்குமாணவிகள் சென்னைக்கு ஓடி வந்தனர். அவர்களை போலீஸார் மீட்டனர்.
நாகப்பட்டனத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 9வது படிப்பவர்கள் உதயசூரியா, கலைவாணி, யாகப் பிரியா, பத்மா ஆகியோர்.இவர்களுக்கு 15 வயதாகிறது. இவர்கள் நான்கு பேரும் உயிர்த் தோழிகள், வீடுகள் அருகருகே இருப்பதால் பள்ளிக்கு சேர்ந்தே போவார்கள்,வருவார்கள்.
நான்கு பேரும் சுமாராக படிக்கும் மாணவிகள் என்று தெரிகிறது. இதனால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுப்பதில்லை. இந்நிலையில் சமீபத்தில் பள்ளியில் தேர்வு நடந்துள்ளது. அந்தத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை வெள்ளிக்கிழமை வகுப்புஆசிரியர் மாணவிகளிடம் கொடுத்துள்ளார்.
இந்த நான்கு மாணவிகளிடம் விடைத்தாள்களைக் கொடுத்தபோது, இரண்டுக்கும் மேற்பட்ட பாடங்களில் பெயில் ஆகியுள்ளீர்கள். நீங்கள்எல்லாம் எங்கே பாஸ் ஆகப் போகிறீர்கள், எதற்குமே லாயக்கற்றவர்கள் நீங்கள் என்று திட்டியதாகத் தெரிகிறது.
இதனால் 4 பேரும் அவமானமாக உணர்ந்தனர். வகுப்பு முடிந்து வெளியே வந்த அவர்கள், வீட்டுக்குப் போக பயந்தனர். வீட்டிலும் திட்டுவிழுமோ என்று அஞ்சினர். இதையடுத்து வீட்டுக்குப் போகாமல் எங்காவது ஓடிப் போக முடிவு செய்தனர். காலில் இருந்த கொலுசுகளைவிற்று கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு நான்கு பேரும் மயிலாடுதுறைக்கு பஸ்சில் சென்றனர்.
அங்கு போனதும், மயிலாடுதுறையிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறிக் கொண்டனர்.
சனிக்கிழமை காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் 4 பேரும் அங்கு இறங்கினர். தாம்பரத்தில் இறங்கிவிட்ட அவர்களுக்குஅதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் விழித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இமாகுலேட்ரிவோட்டாவின் பார்வையில் இவர்கள் பட்டனர். அவரும், பெண் போலீஸாரும் அந்த மாணவிகளை விசாரித்தபோது நடந்த உண்மைதெரியவந்தது.
இதையடுத்து 4 மாணவிகளையும் அவர் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு அனுப்பினார். பின்னர் நாகப்பட்டனம் போலீஸார் மூலம்மாணவிகளின் பெற்றோருக்குத் தகவல் தரப்பட்டது.
அதன் பின்னர் நால்வரின் பெற்றோரும் சென்னை விரைந்து வந்தனர். அவர்களிடம் மாணவிகள் ஒப்படைக்கப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications