ஜெ. கருத்துக்கு முஸ்லீம் ஜமாத் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்பவில்லை என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறியிருப்பதற்கு தமிழக மற்றும் பாண்டிச்சேரி மாநில ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பு கண்டனம்தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழகப் பிரிவின் இணைச் செயலாளர் அப்துல் ரவூப் காலித் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரச்சினைக்குரியஇடத்தில் மசூதி கட்ட முஸ்லீம்கள் விரும்பவில்லை என்று ஜெயலலிதா அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.இதுகண்டனத்துக்குரியது.
அயோத்தி பிரச்சினை கோர்ட் மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ தீர்க்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தைதோல்வியுற்றால் கோர்ட் மட்டுமே தீர்வைக் கொடுக்க முடியும்.
எனவே விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications