அயோத்தி செல்பவர்களைத் தடுக்கும் மாநில அரசுகள்
அயோத்தி:
அயோத்தியில் கர சேவகர்கள் குவிவது தடுக்கப்படும் என அம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அங்கு கோவில் கட்டும் பணியை வரும் 15ம் தேதி முதல் தொடங்க விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.இந்தப் பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து கர சேவகர்களை அயோத்தியில் குவித்து வருகிறது.
கர சேவகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்ததால் கரசேவகர்களை உடனடியாக அயோத்தியில் இருந்து வெளியேற்றவும் மேலும் கரசேவகர்கள் அயோத்திக்குச்செல்லாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவில் கட்டும் பணி தொடங்கினால் நாடு முழுவதும் மதக் கலவரம் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவேஅயோத்தி வந்துவிட்ட கர சேவகர்களை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அயோத்திக்கு வரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் எந்த மாநிலத்திலும் கரசேவர்களுக்குமொத்தமாக ரயில் டிக்கெட்டுகள் தர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பல மாநில அரசுகளும் கரசேவைக்குச் செல்பவர்களைத் தடுத்து நிறுத்த ஆரம்பித்துள்ளன.மகாராஷ்டிரத்தில் அயோத்திக்கு செல்ல முயன்ற பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகாரில் கரசேவைக்குச் செல்வது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்பவர்களைத் தடுக்க தனக்குராணுவப் படைகள் வேண்டும் என அம்மாநில முதல்வர் ராப்ரி மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.
கர்நாடகத்திலும் பல்வேறு இடங்களில் இருந்தும் கரசேவைக்குச் செல்ல பலர் முயன்று வருகின்றனர். இதனால் ரயில்நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் தொடர்ந்து ரயில் எரிப்புக்கு எதிராகபேரணிகளும் கடையடைப்புகளும் நடந்து வருகின்றன. பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
பெங்களூரில் நேற்றும் வி.எச்.பி. கண்டன ஊர்வலம் நடத்தியது. இதில் வன்முறை ஏற்பட்டது. கல்வீச்சும் நடந்தது.இதனால் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கரசேவைக்கு வேறு வழிகளில் ஆட்களை அயோத்திக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில்வி.எச்.பி. ஈடுபட்டுள்ளது. ஆனால், வி.எச்.பி. மீது இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல்கரசேவகர்களைத் தடுப்பது போன்ற அதிக பலன்தராத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications