காஞ்சி சங்கராச்சாரியாரை அத்வானியும் சந்தித்தார்
டெல்லி:
மத்திய அரசின் சார்பில் வி.எச்.பியுடன் சமரசம் பேசி வரும் காஞ்சி சங்கராச்சியாரை உள்துறை அமைச்சர்அத்வானி நேரில் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவருடன் பேச்சு நடத்தினார். நேற்றிரவுநள்ளிரவு வரை பிரதமர் வாஜ்பாய் தனது இல்லத்தில் சங்கராச்சாரியாருடன் பேச்சு நடத்தினார்.
அயோத்தியில் கோவில் கட்டும் பணியை வி.எச்.பி. வரும் 15ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக 12ம் தேதிகோவிலுக்கான தூண்களை கோவில் பகுதிக்கு கொண்டு செல்லும் பணியைத் தொடகவுள்ளது. கோவில் கட்டும்பணியை கைவிடுமாறு வி.எச்.பியிடம் மத்திய அரசு கெஞ்சி வருகிறது. இதற்காக சங்கராச்சாரியரை விமானப்படையின் சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு வரவழைத்துள்ளது.
அவர் பலமுறை வி.எச்.பி. தலைவர்களுடன் பேசியும் பலன் ஏற்படவில்லை. சமரச முயற்சிக்காக வந்த அவரேவி.எச்.பியின் நிலையைத் தான் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தைவி.எச்.பியிடமே ஒப்படைத்துவிடுமாறு அவர் வாஜ்பாயிடம் நேற்று வலியுறுத்தினார். இந்த இடத்தில் தான் வரும்15ம் தேதி தூண்களுக்கு சிறப்புப் பூஜை செய்யும் வி.எச்.பி. திட்டமிட்டுள்ளது.
ஆனால், அதைச் செய்தால் நாட்டில் வன்முறை வெடிக்கும் என வாஜ்பாய் அவரிடம் விளக்கினார்.
இதையடுத்துத் தான் பெர்னாண்டஸ் அவரை இன்று அதிகாலை தெற்கு டெல்லியில் கமாட்சி கோவிலில் வைத்துசந்தித்தார்.
இந் நிலையில் உள்துறை அமைச்சர் அத்வானியும் சங்கராச்சாரியாரை சந்தித்தார். இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள்நீடித்தது. சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த அத்வானி என்ன பேசினார் என்பதை விளக்க மறுத்துவிட்டார்.
நேற்று தான் அத்வானி குஜராத் சென்று வன்முறை நடந்த இடங்களைப் பார்வையிட்டார். குஜராத் அரசுவன்முறையை 4 நாளே கட்டுப்படுத்திவிட்டது என்று பாராட்டுத் தெரிவித்த அவர் இந்த வன்முறையால் பா.ஜ.க.அரசின் பெயர் கெட்டுவிட்டதாகவும் கூறினார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications