மோதல் ஆரம்பம்: கருணாநிதியிடம் விளக்கம் கேட்கிறது பாஜக
சென்னை:
ராமர் கோவில் கட்ட அனுதித்தால் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் எனக் கூறியதற்குகருணாநிதி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார்.
ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அனுமதித்தால் கூட்டணியில் இருந்து உடனடியாக திமுக விலகும் என்றுகும்பகோணத்தில் நடந்த கோசி.மணியின் திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இது குறித்து இல.கணேசன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அயோத்தியில் கோவில் கட்டினால் கூட அதை திமுக எதிர்க்குமா என்பதையும்,இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்பட்டு அங்கு கோவில் கட்டப்பட்டாலும் திமுக எதிர்க்குமாஎன்பதையும் கருணாநிதி உடனடியாக விளக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் போது வாஜ்பாய் சொன்ன சொல்லை காப்பாற்றுவார். பேச்சுவார்த்தைமூலமாகவோ, நீதிமன்ற தீர்ப்பு மூலமாகவோ தான் ராமர் கோவிலை கட்ட அரசு அனுமதிக்கும்.
ராமர் கோவில் பிரச்சனை 1949ல் இருந்து நீதிமன்றதில் இருக்கிறது. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்றஇந்துக்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்கக் கூடாது.
அதே போல் முகமது நபியின் முடி ஹசரத்பால் மசூதியில் உள்ளதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர். அந்த முடியைதடயவியல் சோதனைக்கு அனுப்பி உறுதி செய்தீர்களா என்று கேள்வி கேட்கக் கூடாது.
அவர்கள் நம்பிக்கையை நாங்கள் ஏற்பது போல், எங்களது நம்பிக்கையையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
அயோத்தியில் மசூதி இருந்ததாக போலி மதவாதிகள் வரலாறு பேசுகின்றனர். அந்த இடத்தில் விக்கிரமாதித்தன்கட்டிய கட்டடம் இருந்தது. பாபர் காலத்தில் அதை இடித்து, பாதி இடிந்த நிலையில் அதன் மேல் மசூதி போன்றஅமைப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் அதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு மினார் எழுப்பப்படவில்லை. பூர்த்தி செய்யப்படாதஅந்த கட்டடத்தில் இது வரை ஒரு நாள் கூட தொழுகை நடந்தது கிடையாது.
அந்த கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன் நான் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறேன். அங்கு யாழி, பாவைவிளக்கு, தசாவதார சிற்பங்கள், அனுமன் சிற்பங்கள் போன்ற இந்துக்களின் சிற்பங்கள் தான் இருந்தன. அந்தகட்டடத்திற்கு பெயர் ஜன்மஸ்தான் மஸ்ஜித் என்று தான் இருந்தது.
இதைத்தான் மசூதி என்று போலி மதவாதிகள் பொய் பிரச்சாரம் செய்து, படிப்பறிவில்லாத இஸ்லாமியர்களை திசைதிருப்பி விட்டனர்.
சபர்மதி ரயிலை திட்டமிட்டு எரித்த சம்பவத்தில், காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும்தொடர்புள்ளது. குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்த நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மூலம், அவர்களது எண்ணம்வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதாக கூறியுள்ள ஜெயலலிதா, அதற்காக எடுக்கும் நியாயமானநடவடிக்கைகள் அனைத்தையும் பாஜக ஆதரிக்கும்.
தமிழகத்தின் தமாகாவின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஜி.கே.வாசனை எம்.பி.யாக்குவதற்காக,கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் தயவை நாடி கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
தமாகா ஒரு காலியான பெருங்காய டப்பா என்று இல.கணேசன் கூறினார்.












Click it and Unblock the Notifications