அமைச்சர் சரோஜா நீக்கம்: கிராமமே கொண்டாட்டம்
திருச்சி:
அமைச்சர் பதவியிலிருந்து சரோஜா நீக்கம் செய்யப்பட்டதால், அவருடைய கிராம மக்கள் அம்மனுக்கு படையல்வைத்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே டி.முருகப்பட்டி உள்ளது. இது முன்னாள் அமைச்சர் சரோஜாவின்சொந்த கிராமம்.
முதன் முதலில் சரோஜா அமைச்சராகி இந்த கிராமத்திற்கு வந்த போது இந்த கிராம மக்கள் பூர்ண கும்ப மரியாதைசெய்தனர். ஆனால் இதன் பிறகு சரோஜாவின் மகன் சுரேஷ்காந்தி, அடியாட்களை வைத்து கொண்டு கிராமத்தில்அராஜகம் செய்ய ஆரம்பித்தார்.
அவருடைய கேபிள் டிவி அறை தீப்பிடித்த விவகாரத்தில் 8 பேரை கைது செய்ய வைத்தார். இது அந்தமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உண்மை குற்றவாளியை விட்டுவிட்டு அப்பாவிகளை கைதுசெய்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.
கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர்.இந்நிலையில் ஜெயலலிதா, சரோஜாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்ககினார்.
இதை கிராம மக்கள் பண்டிகையை போல் உற்சாகமாக கொண்டாடினர்.
5,000, 10,000 வாலா சர வெடிகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, தளுகை, பாதர்பேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், முருகப்பட்டிமாரியம்மன் கோவிலில் திங்கள்கிழமை கூடினர். சரோஜா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு நன்றியாக அம்மனுக்குபொங்கல் வைத்து படையலிட்டனர்.
பின்னர் அனைவருக்கும் சுண்டல் விநியோகிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்தேசம் கட்சியின் மாநிலஅமைப்பாளர் ஆனந்த் செய்திருந்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications