தபால்பெட்டியில் துப்பாக்கிக் குண்டுகளுடன் கிடந்த வீரப்பனின் கடிதம்
கோயம்புத்தூர்:சிறுமுகையில் உள்ள ஒரு தபால் பெட்டியில் ஒரு கவரில் 5 புல்லட்டுகளுடன், ஒரு கடிதமும் போடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகையில் உள்ள ஒரு தபால் பெட்டியில் இந்த கவர் இருந்துள்ளது. எப்போதும்போல் போஸ்ட் மேன் இந்த பெட்டியை திறந்து அந்த கவரை எடுத்துள்ளான்.
ஆனால் இந்த கவரில் அனுப்புனர் முகவரியும், பெறுபவர் முகவரியும் இல்லாததால் இந்த கடிதத்தை போஸ்ட்மாஸ்டரிடம், போஸ்ட் மேன் கொடுத்துள்ளான்.
போஸ்ட்மாஸ்டர் சந்தேகம் அடைந்து அந்த கவரை போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். போலீசார் அதை திறந்துபார்த்த போது அந்த கவரில் ஒரு கடிதமும், 0.22 ரக தோட்டாக்கள் 5 இருந்துள்ளது.
அந்த கடிதத்தில் வீரப்பனுக்கு உடல் நிலை பாதிப்படைந்துள்ளதாகவும், இந்த கடிதத்தை கொண்டு வருபவரிடம்மருந்து வாங்குவதற்கு பணத்தை கொடுக்குமாறும் யாரோ எழுதியுள்ளனர்.
இந்த கடிதத்தை வீரப்பனின் கூட்டாளிகள் எழுதி, அனுப்பியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தகடிதம் தொடர்பாக ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து கோயம்புத்தூர்போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications