அகதிகளின் உதவிப் பணத்தைத் சுருட்டிய 7 அரசு மிருகங்கள்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்து சுருட்டிய அரசு அதிகாரி உட்பட 7பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரி சுக்கனேந்தல் கிராமத்தில் இலங்கை அகதிகளுக்காக 435வீடுகள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக 1995ம் ஆண்டில் ரூ.43.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பகுதியில் ஒரு வீட்டைக் கூட கட்டாமல் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாகக் கணக்கு காட்டி முழுப்பணத்தையும் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டனர். இதன் பின்னர் இவர்கள் இடமாற்றமும் பெற்று வேறுஇடங்களுக்குச் சென்றிவிட்டனர்.

இந்த விவரம் தெரியவந்தவுடன் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பகுதி பொது மக்கள்,தமிழக அரசிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து விசாரிக்குமாறு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தமிழகஅரசு உத்தரவிட்டது.

போலீஸ் விசாரணையில் மோசடி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை சுருட்டிய காரைக்குடி தாசில்தாராகஇருந்த இப்ராஹிம், துணை தாசில்தார் சர்தார், உதவியாளர் தனசேகரன், கிராம அதிகாரி ராமச்சந்திரன்,காண்டிராக்டர் கதிரேசன், இலங்கை அகதி முத்து உட்பட 6 பேர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை சென்னையில் புள்ளியியல் துறை உதவி இயக்குனராக பணிபுரியும் சையதுஉசேன் என்ற அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மோசடி காலத்தில் தேவகோட்டையில்ஆர்.டி.ஓ.வாக இருந்தவர்.

7 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+