அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறை தண்டனை
டெல்லி:
சர்வதேசப் புகழ் பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு உச்ச நீதிமன்றம் ஒரு நாள் சிறை தண்டனைவிதித்துள்ளது. இதற்காக அவர் திகார் சிறை கொண்டு செல்லப்பட்டார்.
குஜராத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கக் காரணமாக உள்ள நர்மதை அணைக் கட்டுத் திட்டத்தைஎதிர்த்து நர்மதா பசாவ் ஆந்தோலன் அமைப்பின் தலைவர் மேதா பாட்கருடன் சேர்ந்து அருந்ததியும் போராடிவருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நர்மதா பாதுகாப்புத்திட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுடன் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தார் அருந்ததி. அதில், நீதிபதிகள் குறித்து சில விமர்சனங்களைச்செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் அடையாள சிறை தண்டனையோடு ரூ. 2,000 அபராதமும் செலுத்த வேண்டும் என அவருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
அபராதத்தை செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால்,அபராதம் செலுத்துவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை அருந்ததி ராய் கூறினார்.
சிறந்த எழுத்தாளரான இவர் சர்வதேச புகழ்பெற்ற புக்கர் பிரைஸ் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்க அவர் மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் நிருபர்களிடம் பேசிய அருந்ததி, இந்தத் தீர்ப்பின் மூலம் நான்எனது பதில் மனுவில் கூறியிருந்தது (நீதிபதிகளை விமர்சித்தது) சரி தான் என்பது தெளிவாகிவிட்டது என்றார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய மேதா பாட்கர் திட்டமிட்டுள்ளார்.
மேலும் அருந்தது அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையின் முன் அவர் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவும் மேதா பாட்கள் முடிவு செய்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications