கடும் எதிர்ப்பை சந்திக்கும் அயோத்தி சமரச திட்டம்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் சமரசம் காண காஞ்சி சங்கராச்சாரியாரின் யோசனை குறித்து விவாதிக்க இஸ்லாமிய சட்டவாரியத்தின் தேசியக் குழுக் கூட்டம் வரும் 10ம் தேதி கூடுகிறது.
கோவில் கட்ட பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தின் ஒரு பகுதியை ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என சங்கராச்சாரியார் யோசனை தெரிவித்தார். இதை இஸ்லாமிய சட்ட வாரிய உறுப்பினர்கள்ஏற்றுக் கொண்டனர்.
அதே போல பிரச்சனைக்குரிய நிலத்தில் வழக்கமான பூஜை நடத்துவது தவிர புதிதாக கோவில் கட்டுவது போன்றசெயல்களில் ஈடுபடக் கூடாது என வி.எச்.பியிடமும் அவர் யோசனை கூறினார். இதை வி.எச்.பியும் ஏற்றுக்கொண்டுவிட்டது.
இந் நிலையில் இந்த சமரசத் திட்டத்துக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தெலுங்கு தேசம் எதிர்ப்பு:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியான தெலுங்கு தேசம் இந்த யோசனைக்ைகு எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை கோவில் கட்டுவதற்காக வி.எச்.பியிடம் நிலத்தைத் தரக் கூடாது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எர்ரன் நாயுடு கூறினார்.
மம்தா பானர்ஜி எதிர்ப்பு:
வி.எச்.பியின் நெருக்குதல்களுக்கு பிரதமர் பணியக் கூடாது என்று கூறிய திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி இது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து தனது எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
டெல்லி இமாம் எதிர்ப்பு:
நிலத்தை விட்டுத்தர இஸ்லாமிய சட்ட வாரியத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என டெல்லி ஜூம்மா மசூதியின்தலைவரான சாகி இமாம் சையத் அகமத் புகாரி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபர் மசூதிவிவகாரத்தில் தலையிடவே இந்த வாரியத்துக்கு அதிகாரம் இல்லை. அகில இந்திய பாபர் மசூதி செயல் கமிட்டிதான் இதில் எந்த முடிவும் எடுக்க முடியும். நிலத்தை விட்டுத்தர இந்தக் கமிட்டிக்குக் கூட அதிகாரம் கிடையாது.
மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் பலவந்தமாக வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை அகற்றிவிட்டு அந்தநிலத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைத்தால் தான் பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு:
அயோத்தியில் எந்த நிலத்தையும் வி.எச்.பியிடம் தரக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
நீதிமன்றத்தில் விவகாரம் இருந்து வரும் நிலையில் வி.எச்.பிக்குப் பணிந்து நிலத்தைத் தருவது, பூஜை செய்யஅனுமதிப்பது போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது. நிலம் தருவது என்பது கோவில் கட்டவி.எச்.பிக்கு மத்திய அரசு அனுமதி தருவதாகத் தான் அர்த்தம்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் யோசனைகள் ஏற்புடையதல்ல. அவர் சமாதானம் பேசினாலும் கோவில் கட்டியேதீருவோம், எங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்று வி.எச்.பி. கூறிக் கொண்டிருக்கிறது. பாபர் மசூதி இருந்தஇடத்தில் தான் கோவிலின் கர்ப்பக் கிரஹம் அமையும் எனவும் வி.எச்.பி. திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதனால்,நிலத்தைத் தருவது அவர்களின் அச்சுறுத்தல்களுக்கு பணிந்தது போல ஆகிவிடும்.
அவர்களின் நிபந்தனைக்கு அரசு பணிந்தால் நாடு துண்டாகும், ஒற்றுமை சிதறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கூறியுள்ளது.
காங்கிரசும் எதிர்ப்பு:
அயோத்தி விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் நிலத்தை வி.எச்.பியிடம் தருவதை ஏற்கமாட்டோம். இந்தப் பிரச்சனையை சட்டப்படி தான் தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,
அயோத்தி விவகாரத்தில் காங்கிரசின் நிலை என்ன என காஞ்சி சுவாமிகள் கேட்டார். அவர் மீது பெரும்வைத்திருக்கும் சோனியா காந்தி தனது நிலையை அவரிடம் தெரிவித்துவிட்டார் என்றார்.
பிரதமருடன் காஞ்சி சுவாமிகள் மீண்டும் சந்திப்பு:
இதற்கிடையே தனது சமரச முயற்சிகளில் காஞ்சி சங்கராச்சாரியார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். பிரதமர் வாஜ்பாயைஅவர் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ், உள்துறை அமைச்சர்அத்வானியும் அவரை மீண்டும் சந்தித்தனர்.
வி.எச்.பி. தலைவர்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர்களுடனும் அவர் மீண்டும் பேசி வருகிறார்.
இஸ்லாமிய சட்ட வாரிய உறுப்பினர்களையும் அவர் மீண்டும் சந்தித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications