இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்: தாக்கல் செய்யப் போவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால், பட்ஜெட்டை வாசிக்கப் போவதுயார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

சென்னை மாநகராட்சியில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பதில் பெரும் அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. மேயர், துணை மேயர்,கமிஷனர் ஆகியோர் இடையே இந்தப் போட்டி நிலவுகிறது.

குறிப்பாக மேயர் ஸ்டாலினுக்கும், துணை மேயர தியாகராஜனுக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இதில் கமிஷனர், பலசமயங்களில் துணை மேயருக்கு ஆதரவாக நடந்து கொள்வார் என்பதால் மேயருக்கும், கமிஷனருக்கும் இடையேயும் பூசல் ஏற்படுவதுவழக்கமானது.

இந் நிலையில் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால் பட்ஜெட்டை யார்வாசிக்கப்போவது என்று தெரியவில்லை. கமிஷனர் ராமநாதன் விடுமுறையில் இருக்கிறார். இந்த பட்ஜெட் விவகாரத்தில் இருந்துதப்புவதற்காகவே அவர் வெளிநாடு போய்விட்டார்.

அங்கிருந்து கொண்டே பேக்ஸ் மூலம் 45 நாட்களுக்கு விடுமுறைக் கடிதம் அனுப்பிவிட்டார். இப்போது கமிஷ்னர் பொறுப்பில் இருக்கும்உதவி ஆணையர் கார்த்திக் கூறுகையில், பட்ஜெட்டை நான் தாக்கல் செய்வேன். ஆனால் அதை வாசிக்கப் போவது யார் என்பதைகவுன்சிலர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட்டை வாசிக்க வேண்டியது மேயரின் உரிமை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் மேயர் ஸ்டாலின் பட்ஜெட்டை வாசித்தால்அதற்கு அதிமுக மற்றும் தமாகா கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது நிச்சயம். இதனால் பட்ஜெட்டை யார் வாசிப்பது என்பதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பட்ஜெட்டை யார் வாசிப்பது என்பதில் குழப்பம் நிலவுவதால் இன்று மாநகராட்சிக் கூட்டத்தில் கூச்சல், குழப்பத்திற்கு பஞ்சம் இருக்காதுஎன்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+